இஸ்ரேலில் தாக்குதலில் 3 நாட்களில் 40க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலி
லெபனானின் சுகாதார அமைச்சர் 40 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் மூன்று நாட்களில் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார்.
கடந்த அக்டோபரில் ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலும் மோதத் தொடங்கியதில் இருந்து ஒட்டுமொத்தமாக 97 பேர் கொல்லப்பட்டனர்.
சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாட் செய்தியாளர்களிடம் , மூன்று நாட்களில் “ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களில் பணிபுரிபவர்களில்” 40 பேர் கொல்லப்பட்டனர்.
சண்டை தொடங்கியதில் இருந்து 97 “துணை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள்” கொல்லப்பட்டதாகவும் 188 பேர் காயமடைந்ததாக குறிப்பிட்டார்.
ஹெஸ்பொல்லா அல்லது பிற லெபனான் கட்சிகளுடன் இணைந்த அமைப்புகளில் உள்ள மீட்பவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.
மோதல்கள் தொடங்கியதில் இருந்து, 127 குழந்தைகள் உட்பட 1,974 பேர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர், 9,350 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த வாரம், ஹெஸ்பொல்லாவின் கோட்டையான தெற்கு லெபனானின் சில பகுதிகளில் தனது துருப்புக்கள் தரைவழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.