மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றங்கள் : விமான பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்!
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றங்கள் காரணமாக பல்வேறு நாடுகள் விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து வளைகுடா மற்றும் தெற்காசியாவிற்கு செல்லும் விமானங்கள் துருக்கியின் தென்கிழக்கு மூலையில் பறந்து பின்னர் ஈரான் அல்லது ஈராக் வான்வெளி மீது பறந்து செல்கின்றன.
ஆனால் ஈரானில் இருந்து ஈராக் மீது இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதால், இரு நாடுகளின் வான்வெளியும் மூடப்பட்டது. ஜோர்டானின் வான்வெளியும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனையடுத்து விமனா பயணிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக பாரிஸிலிருந்து மும்பைக்கு பயணித்த AF218 விமானம் 08 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏர்பஸ் ஏ350 விமானம் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அது ஈராக்கை அடைந்த நேரத்தில், நாட்டின் வான்வெளி திடீரென மூடப்பlட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல விமானங்கள் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தாமதமாக தங்கள் இலக்குகளை அடைந்ததாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.