இலங்கை – புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை : அதிர்ச்சியில் மத்திய வங்கியின் ஆளுநர்கள்!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், முன்னாள் ஆளுனர்கள் அல்லது எதிர்கால ஆளுநருக்கு ஓய்வூதியம் கிடைக்காது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் தலைவரும் மத்திய வங்கியின் ஆளுநருமான கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுனர்களின் ஓய்வூதியம் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இரத்து செய்யப்பட்டு பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மீண்டும் செயற்படுத்தப்பட்டது.
இதன்படி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்களும் 2015 ஜனவரி 1ஆம் திகதி முதல் மாதாந்த ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டனர்.
இது மத்திய வங்கியின் ஆளுநருக்கு அவரது கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 74 சதவீதத்திற்குச் சமமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான உரிமையை அவரது சேவை ஆண்டுகளைப் பொருட்படுத்தாது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இனிமேல் எந்தவொரு மத்திய வங்கி ஆளுநருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது.