இலங்கை வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 883 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொட்டுகுடா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 42 times, 1 visits today)





