வரிக் கொள்ளையர்களுக்கு 30 ஆம் திகதி வரை வாய்ப்பு
வரி செலுத்தாமல் ஏமாற்றும் மதுபான உற்பத்தியாளர்களுக்கு அவற்றை மீளச் செலுத்த எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உரிய சலுகை காலத்தின் பின்னரும் வரி செலுத்தாமல் இருக்கும் மதுபான உற்பத்தியாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அவர்களின் உற்பத்தி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் ஏ.ஜே.குணசிரி தெரிவித்தார்.
கலால் திணைக்களத்துக்கு இதுவரை செலுத்த வேண்டிய நிலுவை பணம் 180 கோடியாக இருப்பதாக கலால் திணைக்களத்துக்கு நேற்று வரவழைக்கப்பட்ட மதுபான உற்பத்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வருடம் மதுபான வரியாக 23200 கோடி ரூபாய் உழைக்க எதிர் பார்க்கப்படும் அதே வேளை இதில் 16200 கோடி ரூபா திரைசேரிக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் இது கடந்தஆண்டை விட 5300 கோடி ரூபா அதிகமானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.