தற்காலிகமாக மூடப்பட்ட ஈரான் வான்வழி! வெளியான அறிவிப்பு
செவ்வாய்கிழமை மாலை இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியதையடுத்து, ஈரான் தெஹ்ரானின் வான்வெளியை மூடியுள்ளது.
இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (03) காலை வரை ஈரானில் அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,ஈரானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் தாக்குதல் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியான அதிகரிப்பு பிராந்தியம் முழுவதுமான பிராந்திய யுத்தத்தின் விளிம்பில் உள்ளது என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.