இலங்கை

இலங்கை பொதுத் தேர்தல் : யானை சின்னத்தில் களமிறங்கும் ரணிலின் குழுவினர்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் யானை சின்னத்தில் அல்லது வேறு ஒரு சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தை பெற்றுக்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து கோரப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் சின்னம் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (02) கொழும்பு மலர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தை பெற முடியாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் ‘யானை’ சின்னத்தில் அல்லது வேறு பொதுவான சின்னத்தில் போட்டியிடுவார்கள் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்