இலங்கையில் 17 வயதான பாடசாலை மாணவன் அடித்துக் கொலை

மஹவெல பிரதேசத்தில் நேற்று மாலை 17 வயதுடைய சிறுவன் ஒருவன் சிலரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இரும்பு கம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்களை பயன்படுத்திய சிலரால் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் மஹவெல பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மஹாவெல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)