பொதுத் தேர்தலில் ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி வெற்றி
ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPO) நாட்டின் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுக் கொண்ட முதல் வெற்றி இதுவாகும்.
10 மில்லியன் மக்கள் வசிக்கும் குறித்த நாட்டில் அதிக பணவீக்கம், உக்ரேன் – ரஷ்யப் போர் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் ஆகியன பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
இதனால் அந்நாட்டு மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் விரக்தியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் முதற்கட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் சுதந்திரக் கட்சி 29.2% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்ததாகவும், ஜனாதிபதி கார்ல் நெஹாமரின் ஆஸ்திரிய மக்கள் கட்சி 26.5% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததாகவும் தெரிவித்தது.
மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் 21% உடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
வெளியேறும் அரசாங்கம் நெஹாமரின் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைவாதிகளின் கூட்டணி நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பெரும்பான்மையை இழந்தது.
2021 முதல் சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கிய முன்னாள் உள்துறை அமைச்சரும் நீண்டகால பிரச்சாரருமான ஹெர்பர்ட் கிக்ல் (Herbert Kickl) ஜனாதிபாயக இருக்க விரும்புகிறார்.
ஆனால், ஆஸ்திரியாவின் புதிய தலைவராவதற்கு, அவருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஒரு கூட்டணிக் கட்சி தேவை. அரசாங்கத்தில் கிக்லுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று போட்டியாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால், சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கான வாய்ப்பு சிக்கலாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.