இந்தியா செய்தி

நாட்டு பசு மாடுகளை ராஜமாதாவாக அறிவித்த மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிரா மாநில அரசு நாட்டு பசுமாடுகளை ராஜமாதாவாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அம்மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், “பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. வேத காலத்தில் இருந்தே ஆன்மிகம், அறிவியல் மற்றும் இராணுவ துறையில் பசுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவகையாக பார்க்கப்படுகின்றன.இந்தியா முழுவதும் பல்வேறு வகையான மாடுகள் இருக்கின்றன. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை அண்மைய காலமாக வெகுவாக குறைந்து வருகிறது.

ஆகவே நாட்டு மாடுகளை விவசாயிகள் வளர்க்க வேண்டுமென அரசு ஊக்குவிக்கிறது. மாட்டு சாணத்தை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம், நமது உணவில் அதிக ஊட்டச்சத்து பெற முடியும்.

சமூக – பொருளாதார காரணிகளுடன் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு பசுக்கள் ராஜமாதாவாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை மனதில் வைத்து தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்தியாவின் வடமாநிலங்களில் பசுக்கள் புனிதமானவை என்று மக்கள் நம்புகின்றனர். பசுவின் கோமியத்தை புனித நீராக பருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 66 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி