ஈரானில் ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு
ஈரானில் ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இது இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியது.
இந்த தாக்குதல்களில் மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 91 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய புரட்சிகரப் படையின் ஜெனரல் ஒருவரும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஹிஸ்புல்லா தலைவரின் மரணம் வரலாற்று திருப்புமுனையாக அமையும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்திற்கு பழிவாங்காமல் நீதி கிடைக்காது என ஈரானின் உச்ச தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஹசன் நஸ்ரல்லாவை படுகொலை செய்ய இஸ்ரேல் பல மாதங்களாக திட்டமிட்டு வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.
நஸ்ரல்லாவின் வாரிசு குறித்து பல சர்ச்சைகள் உள்ளன.
இதன்படி, நஸ்ரல்லாஹ்வின் வாரிசாக ஹஷேம் சஃபிதீன் மற்றும் நைம் காசெம் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.