பிரான்ஸ் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு சிக்கல் : கடுமையான அணுகுமுறையை கொண்டுவரும் அரசாங்கம்!
பிரான்ஸின் புதிய அரசாங்கம் குடியேற்றப் பிரச்சினைகளில் கடுமையான அணுகுமுறையை எடுக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜூன் மாதம் சட்டமன்றத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்த பின்னர், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், குடியரசுக் கட்சியின் மூத்த பழமைவாத பிரதம மந்திரி மைக்கேல் பார்னியரை நியமித்தார்.
தேர்தல் கொள்கைகளில் முக்கியமான பிரச்சினையாக சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினை தலைத்தூக்கியது. இந்நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதாக நடப்பு அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது.
இதனையடுத்து ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் அமுற்படுத்தப்பட்டுள்ள குடியேற்ற திட்டங்களை ஒருமித்த திட்டங்கள் பிரான்ஸிலும் அமுற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்னியரின் அரசாங்க குடியேற்ற நிலைப்பாடு தேசிய பேரணியின் திட்டங்களால் வலுவாக செல்வாக்கு செலுத்தப்பட்டதாக விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்,
தேசிய பேரணியின் முன்னணி நபரான மரைன் லு பென், புதிய அரசாங்கத்தை தற்போதைக்கு வீழ்த்த விரும்பவில்லை, அதன் ஆரம்ப “செயல்களை” பார்க்க காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளமை நடப்பு அரசாங்கத்தை வீழ்த்த தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி சட்டமியற்றுபவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரலாம் என்ற அனுமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.