வீட்டு பணியாட்கள் முன்னிலையில் ஏற்பட்ட அவமானம் – மனம திறந்தார் ஜெயம் ரவி
எனக்கென்று தனி பேங்க் அக்கவுண்ட் கிடையாது. எனக்கும் மனைவிக்கும் ஜாயின்ட் அக்கவுண்ட்தான். ஆனால் என் மனைவிக்கு தனியாக நான்கைந்து அக்கவுண்ட்கள் உண்டு.
எங்களது ஜாயின்ட் அக்கவுண்ட்டில் நான் பணம் எடுத்தால் அந்த விவரங்கள் ஆர்த்திக்கு சென்றுவிடும். டெபிட் கார்ட் பயன்படுத்தினால் அந்த விவரங்கள் ஆர்த்தி தொலைபேசி எண்ணுக்கு செல்லும். ஒடிபி எண் ஆர்த்திக்குத்தான் செல்லும்.
ஒவ்வொரு சிறு சிறு செலவுக்கு உடனே உடனே நான் கணக்கு சொல்ல வேண்டி இருக்கும்.
வெளிநாட்டு ஷூட்டிங் சென்றால், அங்கு நான் சாப்பிடுகிற பில்லுக்கு கூட ஆர்த்தியிடம் கணக்கு சொல்ல வேண்டும்.
ஆனால் ஆர்த்தி லட்சக்கணக்கான ரூபாயை எந்தக் கணக்கு வழக்கும் இல்லாமல் செலவு செய்வார். அதை யாரும் கேட்க முடியாது.
என்னுடைய போனில் வாட்ஸ்அப் வைத்திருப்பதால் பிரச்சனை என்று ஆறு வருடமாக வாட்ஸ்அப் இல்லாமல் இருந்தேன் நான்.
ஆர்த்தியின் அம்மாவுக்காக மூன்று திரைப்படங்கள் நடித்துக் கொடுத்தேன்.
மூன்று படங்களும் தோல்வி என்று கூறினார்கள். என் அப்பா அண்ணன் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள ஒருவரை வரச்செய்து கணக்கு பார்த்தால், அனைத்துமே லாபம் ஈட்டி இருக்கிறது என்று தெரிய வந்தது.
நான் நடித்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்துமே ஆர்த்தியின் பெயரிலும், சில சொத்துக்கள் என்னுடைய மற்றும் ஆர்த்தியின் பெயரில் மட்டுமே உள்ளன.
அப்படி இருந்தும் கூட தோல்வி கணக்கு சொல்லி ஏன் பணத்தை சுரண்டுகிறார்கள் என்று தெரியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக நானும் ஆர்த்தியும் வாழ்ந்த வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு கிடைக்கவில்லை.
பணியாட்கள் முன்பாக நான் தினமுமே அவமானப்படுத்தப்பட்டேன்.
அதனால்தான் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளேன்” என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.