இலங்கை செய்தி

4000 வாகனங்களைக் காணவில்லை கணக்காய்வு அறிக்கை தகவல்

புதிய அரசாங்கம் நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள் தொடர்பாகவும் கணக்காய்வு நடவடிக்கைகளை நேற்று முதல் (27) ஆரம்பித்துள்ளது.

இதற்கிணங்க கல்வி சுகாதாரம் தபால் திணைக்களம் ஜனாதிபதி காரியாலயம் நீர்ப்பாசன திணைக்களம் உட்பட மேலும் சில நிறுவனங்கள்

தொடர்பில் சோதனை மற்றும் கணக்காய்வு நடவடிக்கைகள் முதற் கட்டமாக தேசிய கணக்காய்வு பணியகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட கணக்காய்வில் இதுவரை 4000 வாகனங்களை காணவில்லை அல்லது இதுவரை ஒப்படைக்கப் படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதே வேளை ஜனாதிபதி காரியாலயம் முன்பாக முறையாக ஒப்படைக்காது கைவிடப்பட்டு சென்றுள்ள 107 வாகனங்கள் தொடர்பில் அந்த வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் பிரச்சாரம் தேடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை எனவும் எந்தளவு விமர்சனங்கள் வந்தாலும் உரிய கோவைகள் மற்றும் வாகனங்கள் பரீட்சிக்கப்படும் எனவும் அரசாங்க சொத்துக்களான அவற்றை முறையாக ஒப்படைக்காத குற்றச் சாட்டில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தேசிய மக்கள் சக்தி மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை