குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதமிருந்த பெண்கள் : இறுதியில் நடந்த சோகம்!

இந்தியாவில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்ட பெண்கள் உள்ளிட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விழாவானது ஜிவித்புத்ரிகா திருவிழா எனக் கூறப்படுகிறது. இதில் தாய்மார்கள் குழந்தைகளுக்காக விரதம் இருப்பது வழக்கமாகும்.
இதன்போது இந்த சடங்கு முறையின் ஒருபகுதியாக ஆற்றில் குளித்த சிலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள அதிகாரிகள் கூறுகையில்இ பலர் திருவிழாவைக் கொண்டாட குளித்த போது நதிகளில் ஆபத்தான நீர் நிலைகளை புறக்கணித்ததாக தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
(Visited 20 times, 2 visits today)