80,000 ஆண்டுகளுக்கு பின் காணக்கிடைக்கும் வால் நட்சத்திரம் – இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!
எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை (80,000) வால் நட்சத்திரம் நாளை மாலை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் இலங்கையர்களுக்கு காணக்கூடியதாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
C/2023 A3 (Tsuchinshan-ATLAS) என்ற வால் நட்சத்திரம் சூரியனுடன் நெருங்கிய சந்திப்பை நெருங்கி பிரகாசமாகி வருகிறது என விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
“இது நிர்வாணக் கண்ணுக்கு ஒரு மங்கலான தெளிவற்ற புள்ளியாகத் தோன்றினாலும், ஒரு சாதாரண தொலைநோக்கி அதன் அற்புதமான வாலை தெளிவான விவரமாக வெளிப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)