முதன் முறையாக தைவானின் ஜலசந்தியை பயன்படுத்திய ஜப்பான் : சீனாவின் நிலைப்பாடு!
ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படை நாசகாரக் கப்பலான சசானாமி தைவான் ஜலசந்தி வழியாக பயணித்துள்ளது.
நவீன ஜப்பானிய போர்க்கப்பல் இந்த மூலோபாய உணர்திறன் கொண்ட நீர்வழிப்பாதையில் முதன்முறையாகச் பயணித்துள்ளது.
ஜப்பானிய நாசகார கப்பல் பன்னாட்டு கடற்படை பயிற்சிகளுக்கு செல்வதற்காக இவ்வழியை பயண்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதேநேரம் குறித்த வழியை ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கப்பல்களும் பயன்படுத்தியுள்ளன.
சீனா தனது பிராந்திய கடற்பரப்பின் ஒரு பகுதியாக கருதும் நீரிணை வழியாக வெளிநாட்டு கடற்படை கப்பல்களை கடப்பதை தொடர்ந்து எதிர்க்கிறது. இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றம் நிலைவியதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் நகர்வு அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது, கடல்வழிச் சுதந்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டிய சர்வதேச கடற்பரப்பு என்று வலியுறுத்துகிறது.
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் போர்க்கப்பல்களின் சமீபத்திய போக்குவரத்துகளும் இந்தக் கொள்கையை வலுப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.