இலங்கை: நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு விளக்கமறியல்!
குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மீதான அவமதிப்பு வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 2, 2024 அன்று வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கத் தவறியதாக இலுக்பிட்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,
தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்கும் செயன்முறை வழங்கப்பட்டதன் ஊடாக முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களால் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுக்களின் அடிப்படையில் குறித்த தீர்மானத்தை இரத்துச் செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்த தவறியதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டது.
குறித்த, வழக்கு அடுத்த வருடம் (1.22, 2025) ஜனவரி மாதம் 22ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.