இலங்கை அணியில் விஷ்வா பெர்னாண்டோவுக்கு பதிலாக விளையாடும் நிஷான் பீரிஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோவுக்கு பதிலாக நிஷான் பீரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய விஷ்வா, வலது தொடை தசையில் இறுக்கம் அடைந்து, மறுவாழ்வு பணிக்காக உயர் செயல்திறன் மையத்திற்கு அனுப்பப்பட்டார்.
எவ்வாறாயினும், பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக ஏற்கனவே அணியில் இருப்பதால், பீரிஸின் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.
(Visited 23 times, 1 visits today)