அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயார்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன்று தெரிவித்துள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நெலும் மாவத்தையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியை விட்டு விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வரவேற்கப்படுவார்களா என்பது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் யாரையும் கட்சியில் திரும்பப் பெறுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து விலகிய பலர் மீண்டும் கட்சியில் சேர கோரிக்கை விடுத்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)