இலங்கை

இலங்கையில் அதிரடியாக வெளியான அடுத்த அறிவிப்பு : மூவர் கொண்ட அமைச்சரவை நியமனம்!

இலங்கையின் புதிய மூன்று பேர் கொண்ட அமைச்சரவை சற்று முன்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

புதிய பிரதமராக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே நீதி, கல்வி, தொழிலாளர், கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பின்வரும் அமைச்சுப் பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

பாதுகாப்பு, நிதி, பொருளாதார மேம்பாடு, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா
ஆற்றல், விவசாயம், நிலம், கால்நடைகள், நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு பின்வரும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நீதி, பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர்,  கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு மேம்பாடு, தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு
ஆரோக்கியம்

விஜித ஹேரத் பின்வரும் அமைச்சுப் பதவிகளை வகிப்பார்.

புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகங்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து
பொது பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள்,  சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், தோட்டம் மற்றும் சமூகம், உள்கட்டமைப்பு ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் கட்டுமானம்

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, பிமல் ரத்நாயக்க, டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச். சம்பத் துயகோந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(Visited 27 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்