சீனாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஜப்பானிய மாணவர்கள் – விடுக்கப்பட்டுள்ள சிறப்பு கோரிக்கை!
சீனாவில் ஜப்பானின் உயர்நிலை பள்ளி மாணவர் ஒருவர் குத்தி கொல்லப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் தூதுவர் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதாவது ஜப்பானிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் குழந்தைகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் “ஆதாரமற்ற, தீங்கிழைக்கும் மற்றும் ஜப்பானிய எதிர்ப்பு” சமூக ஊடக இடுகைகளை ஒடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவு மந்திரி யோகோ கமிகாவா, சீன வெளியுறவு மந்திரி வாங் யீயிடம், கத்திக்குத்து சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி, தெளிவான விளக்கத்தை அளிக்குமாறு கோரியுள்ளதுடன். சந்தேக நபரை தண்டிக்கவும், எதிர்காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.
ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தின்படி, சீனாவில் உள்ள ஜப்பானிய குடியிருப்பாளர்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெய்ஜிங் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கமிகாவா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.