மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் : விமான சேவைகளை நிறுத்திய பிரித்தானியா!
மத்திய கிழக்கு நாடான லெபனானிற்றும் – ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சகங்கள் பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளன.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் தற்போது லெபனானில் இருந்தால், வணிக விருப்பங்கள் இருக்கும் வரை வெளியேறுமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா மற்றும் ஏர் பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் நகருக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. டெல்டா அக்டோபர் இறுதி வரை டெல் அவிவிற்கான சேவைகளை இரத்து செய்துள்ளது.
FCDO-வின் ஆலோசனைக்கு எதிராகப் பயணம் செய்தால், பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளின் பயணக் காப்பீடு செல்லாததாகிவிடும் என்றும் வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.