இலங்கை: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசந்துறைக்கு இடையே விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, தேர்தல் பணிகளில் பங்கேற்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த ரயில்களில் பயணிக்க முடியும்.
இன்றும்(19) நாளை மறுதினமும்(21) காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை விசேட ரயிலொன்று போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது.
நாளை(20) மற்றும் எதிர்வரும் 22ஆம் திகதிகளில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 2 விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் ரயில்கள் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தூர சேவை ரயில்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், குறுகிய தூரங்களுக்கான ரயில் சேவைகள் குறைக்கப்படலாம் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.