அக்டோபர் 1ல் முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ள ஜப்பானின் புதிய பிரதமர்

வரும் அக்டோபர் 1ஆம் திகதி ஜப்பானின் புதிய பிரதமர் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஆளும் கட்சி அதிகாரபூர்வமாக புதன்கிழமை அறிவித்தது.
ஆளும் கட்சியில் யார் தலைவர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.
ஃபூமியோ கிஷிடாவுக்கு அடுத்ததாக லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைமையின் பொறுப்பை ஏற்க செப்டம்பர் 27ஆம் திகதி நடந்த உள்கட்சித் தேர்தலில் ஒன்பது பேர் போட்டியிட்டனர். இவர்களில் மூவர் முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பழமைவாத பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானா டகாய்ச்சி, 63, லிபரல் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷிகெரு இஷிபா, 67, முன்னாள் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமியின் மகன் ஷின்ஜிரோ கொய்சுமி, 43 ஆகியோர் அம்மூவர்.
(Visited 15 times, 1 visits today)