இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பாதுகாப்பிற்காக களமிறங்கும் 60,000 பொலிஸார்
இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் விசேட கடமைகள் மற்றும் பாதுகாப்புக்காக 60,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்கு முன்னர் 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 6,000 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிப்பாய்கள் குழுவொன்றும் ஈடுபடுத்தப்படவுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படும் தேவைக்கு ஏற்ப தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)