அணுசக்தி ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறாரா புடின்
ஈரானுடனான ரஷ்யாவின் இராணுவ ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்காவும் இங்கிலாந்தும் கவலை கொண்டுள்ளன.
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார்.
ரஷ்யா ஈரானிய ஏவுகணைகளைப் பெறுவதற்கு புடினும் ரஷ்யாவும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று இரு நாடுகளும் கவலைப்படுவதால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் மேலும் வலுவடைந்து வருவது குறித்து இங்கிலாந்தும் , அமெரிக்காவும் கவலையடைந்துள்ளன.
ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்து ஜோ பைடன் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி வளர்ச்சிஅதிகரிப்பை தடுக்க அனைத்து சக்திகளையும் பயன்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
ரஷ்யாவோ அல்லது ஈரானோ Bloomberg செய்திக்கு இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.