நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்த ஜோர்தானியப் பிரதமர்
ஜோர்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து ஒருவாரம்கூட முடிவடையாத வேளையில், பிரதமர் பிஷர் அல் கசாவ்னே பதவி விலகல் கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) சமர்ப்பித்ததாக விவரமறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாமன்னர் அப்துல்லாவின் அலுவலகத் தலைவரும் முன்னாள் திட்டமிடுதல் அமைச்சருமான ஜாஃபர் ஹசான், பிரதமராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கசாவ்னே, 2020 அக்டோபரில் பிரதமர் பதவியேற்றார்.
காஸா போர் காரணமாக ஜோர்தானின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தை மட்டுப்படுத்துவதில் நிலவும் சவால்களை ஹசான் எதிர்கொள்ள வேண்டும். முதலீடு செய்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளாலும் சுற்றுப்பயணத்துறை கண்ட வீழ்ச்சியாலும் ஜோர்தானின் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)