சிங்கப்பூரில் பாதுகாப்பற்ற உணவு குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூரில் பாதுகாப்பற்ற உணவால் நேரும் ஆபத்து, குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவால் நேரும் ஆபத்து, இடையூறு ஆகியவற்றுக்குச் சிங்கப்பூர் விதிவிலக்கல்ல என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் Grace Fu தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பின் 65ஆம் ஆண்டுநிறைவை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
நோய்ப்பரவல், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களைத் தற்போது சமாளிக்க வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற சவால்களால் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம், பல அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாகத் Grace Fu கூறினார்.
பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்றவை உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைவதை அமைச்சர் சுட்டினார்.