ஐரோப்பாவை அச்சுறுத்தும் வெள்ளப்பெருக்கு – 4 பேர் மரணம்
வெள்ளப்பெருக்கு காரணமாக ருமேனியாவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
நேற்றைய தினம் முதல் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று செக் குடியரசு முழுவதும் 38 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
தலைநகரமான ப்ராக் நகரிலும் வெள்ளத் தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் மிருகக்காட்சிசாலையும் மூடப்பட்டுள்ளது.
போலாந்திலும் நதிகளின் ஆபத்தான நிலை அதிகரித்துள்ளதால் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக ருமேனியாவின் பல பகுதிகளில் ஏராளமான மக்கள் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.