மியன்மாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடர் – உலக நாடுகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
மியன்மாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைச் சமாளிக்க உலக நாடுகளிடம் மியன்மார் இராணுவ அரசாங்கம் உதவி கோரியுள்ளது.
3 ஆண்டுகளாக உள்நாட்டுக் கலகத்தை எதிர்நோக்கும் மியன்மாருக்கு யாகி (Yagi) சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழை, வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மீட்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவம் கூறியது.
235,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் வெளிநாடுகளைத் தொடர்புகொள்ள வேண்டியிருப்பதாக மியன்மார் அராணுவத் தலைவர் ஜெனரல் Min Aung line கூறினார்.
மீட்பு, நிவாரண, மறுநிர்மாணப் பணிகளை இயன்றவரை விரைவாகச் செய்ய வேண்டியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)