பங்ளாதேஷில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள்

ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்களாதேஷின் டாக்காவிலும் சட்டோகிராமிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகியதிலிருந்து தங்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த அவர்கள் போராடிவருகின்றனர்.
மழையையும் பொருட்படுத்தாமல், எட்டு அம்சக் கோரிக்கைகளுடன் அவர்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனர். விரைவாகச் செயல்படும் தீர்ப்பாயம் மூலம் தாக்குதல்காரர்களுக்குத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பது கோரிக்கைகளில் ஒன்று.
சமய நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் யாரும் எதுவும் செய்யக்கூடாது என்று தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தொலைக்காட்சி உரை ஒன்றில் நாட்டு மக்களுக்குத் தெரிவித்த இரண்டு நாள்களில், ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
(Visited 3 times, 1 visits today)