இலங்கை செய்தி

ஸ்ரீ ரங்காவிற்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, கடந்த வருடம் ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதியின் வீட்டிற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்

சட்டவிரோதமாக ஒன்று கூடியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதற்கு ரங்கா உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

ஸ்ரீரங்கா சொத்திற்கு சேதம் ஏற்படுத்தும் தீயநோக்கத்துடன் அத்துமீறி உள்ளே நுழைந்தார் என குற்றம்சாட்டப்படலாம் எனவும் சிஐடியினர் தெரிவித்திருந்தனர்.

எனினும் ஸ்ரீரங்கா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவர் ஒரு ஊடகவியலாளராகவே அந்த இடத்தில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு பிணைவழங்கி கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை