பிரித்தானியாவில் nasal flu காய்ச்சல் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பிரித்தானியாவில் இரண்டு மற்றும் மூன்று வயது குழந்தைகளின் பெற்றோர்களுக்கு nasal flu தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது.
NHS இங்கிலாந்து செவ்வாய்கிழமை முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களைத் தொடர்புகொண்டு நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தும் என தெரிவிக்க்பபட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் போன்ற பிற குழுக்கள் குளிர்காலத்திற்கு முன்னதாக இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உச்சத்தை அடையும், அதற்கு முன் தடுப்பூசி போடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
(Visited 47 times, 1 visits today)