செய்தி தமிழ்நாடு

தண்ணீர்,மலை உச்சி,சகதி என கராத்தே பயிற்சி

தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கத்தில் பெருமாள் கராத்தே அகடாமியில் மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு கராத்தே பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி முகாமில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக மழை ஏறுதல்,கடல் தண்ணீர் பயிற்சி,வயக்காட்டு சகதியில் கிக்ஸ் பயிற்சி என பல வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கைகளால் செங்கல், ஓடு உடைத்தல் உள்ளிட்ட தேர்வு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மூத்த கராத்தே பயிற்சியாளர் ரென்சி பி.பெருமாள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்,பெல்ட் வழங்கி கவுரவித்தார்.

கோடை காலத்தில் தற்காப்பு கலையை கற்றது சான்றிதழ் பெற்றது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

(Visited 6 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி