பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி உயிரிழப்பு
மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி தனது 86 ஆவது வயதில் காலமானார்.
தந்தையின் உயிரிழப்பை அவரது மகள் கெய்க்கோ புஜிமோரி உறுதிப்படுத்தியுள்ளார்.
புஜிமோரி 1990 மற்றும் 2000 க்கு இடையில் பெருவை ஆட்சி செய்தார்.
புஜிமோரியின் தசாப்த கால பதவிக் காலம் பொருளாதாரத்தை ஒரு சிறந்த பாதையில் கொண்டு செல்வதன் மூலமும் வன்முறை கிளர்ச்சியைத் தணிப்பதன் மூலமும் பிரபலமடைந்தார்.
எனினும் ஆட்சிக் காலத்தில் இடதுசாரி கெரில்லா கிளர்ச்சிக்கு எதிரான அவரது கடுமையான நிலைப்பாடு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வந்தது.
பெரு கிளர்ச்சியின் போது, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கைது செய்யப்பட்டு, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.