பள்ளிக்கூடத்தில் 14 வயது மாணவன் துப்பாக்கிச்சூடு; 8 மாணவர்கள் பலி

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பல்கிரெடி மாகாணம் விரகார் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் இன்று வழக்கம் போல மாணவ-மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினான்.
ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது அந்த மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலு, ஒரு ஆசிரியர், 6 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய கேகே என்ற மாணவனை கைது செய்தனர்.
(Visited 35 times, 1 visits today)