உத்தரபிரதேசத்தில் ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் அடிபட்டு தம்பதி மற்றும் மூன்று வயது மகன் பலி

ரயில் தண்டவாளத்தில் வீடியோ பதிவு செய்யும் போது ரயிலில் அடிபட்டு ஒரு நபர் தனது மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
உமரியா கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் 26 வயது முகமது அகமது , அவரது 24 வயது மனைவி நஜ்னீன் மற்றும் அவர்களது மூன்று வயது மகன் அப்துல்லா உயிரிழந்துள்ளனர்.
ரயில் தண்டவாளத்தில் குடும்பத்தினர் ரீல் பதிவு செய்து கொண்டிருந்த போது ரயில் அவர்கள் மீது மோதியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 41 times, 1 visits today)