இலங்கை முழுவதும் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் இறங்கும் வைத்தியர்கள்!

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊவா மாகாண இணைப்பாளருமான டொக்டர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக முறையான முறைப்பாடு இன்றி நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
மேலும், இன்று (10) முதல் 7 நாட்களுக்கு சகல வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடி காட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
(Visited 21 times, 1 visits today)