இலங்கை

இலங்கை : தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி! முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 7 மாதங்களின் பின்னர் பிணை

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் கொள்வனவுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் பெப்ரவரி 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளின் உதவியுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

விசாரணையில் 50 கோடி ரூபா நிதி மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற மருந்தின் இறக்குமதி மூலம் 130 மில்லியன் ரூபா வருமானம் ஏற்பட்டுள்ளது

விசாரணைகளின் அடிப்படையில் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 23 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்