இலங்கை செய்தி

நல்லூரில் தவறவிட்டவற்றை பெற்றுக்கொள்ள அறிவிப்பு

நல்லூர் மகோற்சவ காலத்தில், ஆலயத்திற்கு வருகை தந்தவர்களால் தவற விடப்பட்ட பொருட்கள் சிலது யாழ் . மாநகர சபையில் உள்ளதாகவும் , அதனை அடையாளம் காட்டி உரியவர்கள் பெற்றுக்கொள்ளுமாறு மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஆலயத்திற்கு வருகை தந்தவர்கள் தவற விட்டவற்றை கண்டெடுத்தவர்கள் , அவற்றை ஆலய உற்சவ கால பணிமனையில் ஒப்படைத்திருந்தனர்.

அவற்றில் இது வரை உரியவர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளாத கைச்சங்கிலி ஒன்று, மோதிரம் (பெண்களினது) ஒன்று, பணப்பைகள் 9, மணிக்கூடு கள் 18, தேசிய அடையாள அட்டை 4, சாரதி அனுமதிப்பத்திரம் 4, வங்கி அட்டைகள் 4. மோட்டார் சைக்கிள் திறப்புகள் உள்ளிட்ட 39 திறப்புகள் என்பன மாநகர சபையில் உள்ளது.

இவற்றை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை உறுதிப்படுத்தி மாநக ரசபை நிர்வாகக் கிளையில் அலுவலக நேரத்தில் 11ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 10ஆம் திகதி வியாழக்கி ழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என யாழ்.மாநகரசபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை