உகிலேயே அதிக சதவீத முதியோர்களைக் கொண்ட நாடு ஜப்பான்
உகிலேயே அதிக சதவீத முதியோர்களைக் கொண்ட நாடு ஜப்பான் என தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை புள்ளி விவரத்தின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அந்த புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மக்கள் தொகையில் மூவரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் தொழிலாளர் சட்டத்தின்படி, 65 வயது வரை வேலை செய்யலாம்.
நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த நிலைமை நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
(Visited 43 times, 1 visits today)





