கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காடுகள் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ காரணமாக மக்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வார இறுதியில் கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் நெவாடா முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைன் ஃபயர் என்று அழைக்கப்படும் தீயானது, LA க்கு கிழக்கே சுமார் 65 மைல் (105 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள சான் பெர்னார்டினோ தேசிய வனத்தின் விளிம்பில் கட்டுப்பாடில்லாமல் பரவியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அத்துடன் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட தீ 20,500 ஏக்கருக்கு மேல் பரவியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பரவ ஆரம்பித்த தீயானது தற்போதுவரையில் கட்டுப்பாடில்லாமல் பரவி வருகின்றது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.