ஆசியா

பாதுகாப்புக்காக மகள் தலையில் சிசிடிவி கேமரா ; பாகிஸ்தானில் தந்தை ஒருவரின் விநோத செயல்!

தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் வலம் வரும் காட்சி பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமராவுடன் தெருவில் செல்கிறார். இது வித்தியாசமாக இருந்ததால் அந்தப்பெண்ணை ஒருவர் பேட்டி எடுக்கிறார்?தலையில் சிசிடிவி கேமரா ஏன்? எனகேட்டதற்கு அந்தப் பெண் கூறுகையில், ‘‘நான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காக என் தந்தை இதை பொருத்தியுள்ளார். இது எனக்கு பாதுகாப்பாக உள்ளது. எனது தந்தைதான் எனது பாதுகாவலர். கராச்சியில் தாக்குதல், கொலை, பாலியல் வன்கொடுமை என பல சம்பவங்கள் நடைபெறுவது கவலையளிப்பதாக உள்ளது. ஆகையால் எனது பாதுகாப்புக்காக இந்த கேமராவை என் தந்தை பொருத்தியுள்ளார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை’’ என்றார்.

இந்த வீடியோ மற்றும் பேட்டியை பார்த்து பலரும் நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர்கூறுகையில், ‘‘இதெல்லாம் பாகிஸ்தானில் மட்டும்தான் நடக்கும்’’ எனகூறியுள்ளார். மற்றொருவர் பதிவிட்டுள்ள கருத்தில், ‘‘இந்த பெண்ணுக்கு அசம்பாவிதம் ஏதும் நடந்தால், இவரது தந்தை எப்படி காப்பாற்றுவார்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொருவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தப் பெண் அவரது தந்தையின் இளவரசி. அதனால் அவளுக்கு கிரீடம் சூட்டியுள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்

(Visited 73 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!