October 28, 2025
Breaking News
Follow Us
விளையாட்டு

SLvsENG Test – இலங்கை அணிக்கு 219 ஓட்டங்கள் இலக்கு

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Jamie Smith அதிகபட்சமாக 67 ஓட்டங்களையும், Dan Lawrence 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara 04 விக்கெட்டுக்களையும், Vishwa Fernando 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 325 ஓட்டங்களையும் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 236 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

இதன்படி இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 3ம் நாள் முடிவில் 94 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

மேலும் இலங்கை அணி சார்பில் அதிரடியாக விளையாடிய பத்தும் நிசங்க 53 ஓட்டங்களையும் மெண்டிஸ் 30 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர்.

நாளை நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு இன்னும் 125 ஓட்டங்கள் மாத்திரமே பெறவேண்டியுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ