சீனாவில் புதிய வைரஸ் கண்டுப்பிடிப்பு
மனித மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.
உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸை ‘வெட்லேண்ட் வைரஸ்’ என்று விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சீனாவின் ஜின்ஷுவில் உள்ள ஈரநிலப் பூங்காவில் பணிபுரிந்த 61 வயது முதியவர் ஒருவரிடம் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு மனித மூளை தொடர்பான கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)