சீனாவில் 125 வகையான புதிய வகை நோய்த்தொற்றுகள் – வெளிவரும் அதிர்ச்சி தகவல்
சீனாவில் 125 வகையான புதிய வகை நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் விலங்குப் பண்ணைகளிலேயே இந்த நோய் தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவற்றில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய 39 வகை ஆபத்தான தொற்றுகளும் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
நேச்சர் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 36 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முயல்கள், குரங்குகள், நரிகள், ராக்கூன் நாய்கள் போன்ற தோலுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் புதிய வைரஸ்களுக்கான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கினியா பன்றிகளிடத்தில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
(Visited 5 times, 1 visits today)