நடுங்கும் மலையாள திரையுலகம் – சிக்கினார் தமிழ் இயக்குனர்
இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த திரையுலகமும் மிகவும் கூர்மையாக கவனித்து வரும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது, ஹேமா கமிட்டி விவகாரம்தான்.
பல நடிகைகள் தங்களுக்கு நடைபெற்ற, தாங்கள் எதிர்கொண்ட பாலியச் சீண்டல்கள் குறித்தும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் வெளியில் சொல்லி வருகின்றனர்.
அந்த வரிசையில் மலையாள படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழுக்கு அறிமுகமான நடிகை ஒருவர் தமிழ் பட இயக்குநர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் அத்வைதம், நீலக்குறுக்கன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை இவர். தற்ப்போது செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசியது மலையாள திரை உலகில் மட்டும் இல்லாமல், தமிழ் திரை உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “அப்போது எனக்கு 18 வயது இருக்கும். எனது வீட்டிற்கு அந்த இயக்குநரும் அவரது மனைவியும் வந்தார்கள். இருவரும் எனது பெற்றோரிடம் பேசி, என்னை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார்கள். இயக்குநர் தனது மனைவியுடன் வந்ததால், எனது பெற்றோரும் சம்மதித்தனர். நாங்கள் கேரளாவில் இருந்து, தமிழ்நாட்டிற்கு வந்தபோது அந்த இயக்குநரின் வீட்டிலேயே தங்கினோம்.
தொடக்கத்தில் எனது பெற்றோருக்கு அந்த இயக்குநர் மீது நம்பிக்கை வந்துவிட்டதால், என்னை இயக்குநர் மற்றும் அவரது மனைவியின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு கேரளாவிற்கு திரும்பிவிட்டனர்.
இப்படியான நிலையில், ஒருநாள் இயக்குநரின் மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து இயக்குநர், என்னை அவரது மகள் போல நினைத்ததாகக் கூறி முத்தம் வைத்தார்.
அதன் பின்னர் ஒருநாள் என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகக் கூறி, என்னை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
என்னால் இந்த விஷயத்தை வெளியில் கூற முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக அந்த இயக்குநர் என்னிடம் அப்படி நடந்து கொண்டார். நான் அவருக்கு ஒரு செக்ஸ் அடிமையாகவே இருந்தேன். அவர் நினைக்கும் நேரத்தில் எல்லாம் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் அந்த இயக்குநர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, ” அவர் யார் என்பதை நான் இங்கு கூற விரும்பவில்லை. ஆனல் கட்டாயம், காவல்துறையில் நான் கொடுக்கும் புகாரில் குறிப்பிடுவேன் எனக் கூறினார். நடிகையின் இந்த பேச்சினால் தற்போது தமிழ் இயக்குநர்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றது.