பங்களாதேஷில் காவல் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம் : 15 வயது சிறுவன் படுகொலை!
சமூக ஊடகங்களில் முகமது நபி பற்றி “ஆட்சேபகரமான கருத்துக்களை” தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 15 வயது இந்து சிறுவன் வங்காளதேசத்தில் உள்ள காவல் நிலையத்திற்குள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தின் குல்னா நகரில் கல்லூரி மாணவர் உத்சவ் மண்டோல் என்ற சிறுவனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் அவதூறாகக் கருதப்படும் ஒரு அறிக்கையை அவர் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தடயவியல் ஆதாரம் இல்லாமல் அவர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இனம்தெரியாத கும்பல் ஒன்று அவரை கொலை செய்துள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்றபோது காவல் நிலையத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் கடமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பங்களாதேஷின் சட்ட அமலாக்க முகவர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படலாம், ஏனெனில் மிருகத்தனமான குற்றம் அவர்களின் கண்காணிப்பில் நடப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.