அறிவியல் & தொழில்நுட்பம்

புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய அறிமுகமாகியுள்ள புதிய தொழில்நுட்பம்!

மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், தொழில்நுட்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.

மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான Machine Learning சார்ந்த அடிப்படையிலான கணினி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

‘GBM Driver’ (GlioBlastoma Multiforme Drivers) என அழைக்கப்படும் இந்தக் கருவி மூலம் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் ஏற்படக்கூடிய கட்டிகளை ஒன்லைனில் கண்டறிய முடியும்.

Glioblastoma (GBM) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தில் வேகமாகவும் தீவிரமாகவும் வளரும் கட்டியாகும். இந்தக் கட்டியைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் காலம் வெறும் 2 ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ளதால், அதிநவீன சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

புதிய கணினி தொழில்நுட்பம் மூலம் மூளை மற்றும் தண்டுவடத்தில் வளரும் புற்றுநோய்க் கட்டியையும் , அதன் வளர்ச்சி மற்றும் அதற்கான சிகிச்சை வாய்ப்புகளையும் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முறையான மருத்துவ உக்தியைக் கண்டறிய உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!